"கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு" - ஆட்சியர் சமீரன் விளக்கம்

கோவையில் நிபா பாதிப்பு இல்லை என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவையில் நிபா பாதிப்பு இல்லை; எல்லைகளில் தீவிர கண்காணிப்பு - ஆட்சியர் சமீரன் விளக்கம்
x
தமிழக - கேரள எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் ஆட்சியர் சமீரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் நிபா காய்ச்சல் எதிரொலியாக, எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக குறிப்பிட்டார். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று கூறிய அவர், தேவைப்பட்டால் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார். இதனிடையே, அவர் பேட்டியின் போது கோவையில் ஒருவர் நிபாவால் பாதிக்கப்பட்டவர் எனக்கூறியதாக ஏ.என்.ஐ. நிறுவனம் செய்தி வெளியிட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆட்சியர் சமீரன் பதிவிட்டுள்ளார். கோவையில் நிபா பாதிப்பு இல்லை என அதில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த செய்தியை ஏ.என்.ஐ நிறுவனம் நீக்கியது.

Next Story

மேலும் செய்திகள்