பாலியல் பலாத்காரத்தால் கருவுற்ற பெண்; கருக்கலைப்பு செய்ய அனுமதி கேட்டு மனு - அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 06, 2021, 11:41 AM
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் கர்ப்பமான பெண் ஒருவர், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்துள்ளனர்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதால் கர்ப்பமான பெண் ஒருவர், சட்டப்படி கருக்கலைப்பு செய்ய நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் அதற்கு அனுமதி அளித்துள்ளனர். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த முடிவை எடுக்கும்படி தனக்கு அழுத்தம் தரவில்லை என்று மனுதாரர் தெரிவித்ததால், இது குறித்து உரிய பரிசோதனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய அரசு மருத்துவர்களுக்கு, உத்தரவிட்டது.அதன்பேரில் அறிக்கை தாக்கல் செய்த மருத்துவர்கள், மனுதாரர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கரு அவர் வயிற்றில் வளரும் பட்சத்தில் இருவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்றதன் கராணமாக, அவரது மனம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சம்பந்தபட்ட சட்டப்பிரிவுகள் கூறுவதால், மனுதாரர் வயிற்றில் வளரும் கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன், மனுதாரர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கருக்கலைப்பு செய்யப்பட வேண்டும் என்றும், அவர் பூரண குணமடையும் வரை அங்கேயே இருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கருவின் மாதிரிகளை எடுத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்கு விசாரணைக்கு ஆதாரமாக பயன்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது


தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

796 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

96 views

முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

48 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

34 views

பிற செய்திகள்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் மரணம் - விலங்குகள் நல ஆர்வலர் புகார்

சென்னை ஐஐடி வளாகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 45 நாய்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

15 views

"மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்" - பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

12 views

பொன்விழா ஆண்டில் அதிமுக - அதிமுகவில் ஜெயலலிதா ஆளுமை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவில், எம்ஜிஆருக்கு பின்னர் ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து ஒரு தொகுப்பை பார்க்கலாம்...

213 views

பொன்விழா ஆண்டில் அதிமுக: எம்.ஜி.ஆர் காலத்தில் கட்சி கடந்து வந்த பாதை

பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுக கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்...

61 views

தமிழகத்தில் மேலும் 1,233 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 15 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்து வருகிறது.

15 views

கோயில் உண்டியலில் கைவரிசை - பூட்டை உடைத்து சென்ற கொள்ளையர்கள் : சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

உளுந்தூர்பேட்டை அருகே கோயில் உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.