சென்னை மாநகரில் புதைவட மின்கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை - மின்துறை அமைச்சர் தகவல்

சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் புதைவட மின்கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், ஜி.கே.மணி ஆகியோர், தனது தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினர். 
இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னுரிமை அடிப்படையில், சோழிங்கநல்லூர் தொகுதியில் துணை மின் நிலையம அமைப்பது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார். பென்னாகரம் தொகுதியில் புதிய கோட்டங்கள் அமைப்பது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். மேலும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதைவட மின்கம்பிகள் இல்லாத இடங்களில் ஆய்வு செய்து திட்டமதிப்பீடுகள் தயார் செய்துள்ளதாகவும், முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்