நடுத்தெருவில் மயங்கி விழுந்த சிறுவன்: பெற்றோரால் பரிதவிக்கும் 13 வயது சிறுவன்
பதிவு : செப்டம்பர் 06, 2021, 07:56 AM
நாகர்கோவில் அருகே பெற்றோர் கைவிட்டதால் 13 வயது சிறுவன் மருத்துவமனையில் பரிதவித்து காத்திருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே வட்டக்கரை பகுதியை சேர்ந்தவர்கள் சாகுல் ஹமீது, பாத்திமா தம்பதிக்கு 13 வயது மகன் உள்ளான். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சாகுல் ஹமீது இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வட்டக்கரை பகுதியில் வசித்து வந்த‌தாக தெரிகிறது. இந்நிலையில், பாத்திமா தனது மகனை அழைத்துச்சென்று, கணவர் சாகுல் ஹமீது வீட்டில் விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சாகுல் ஹமீது வெளியூர் சென்ற நிலையில், சிறுவனை வீட்டிற்குள்  அவரது இரண்டாவது மனைவி அனுமதிக்காத‌தால், சிறுவன் அழுது கொண்டே தெருவில் நின்றுள்ளான். இதற்கிடையே, சிறுவனின் தாய் தனது வீட்டை பூட்டிவிட்டு மாயமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்த‌தால், அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கணவன், மனைவி பிரச்சினை காரணமாக, சிறுவன் நடுத்தெருவில் பரிதவித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று 42வது பிறந்தநாளை கொண்டாடும் யுவனுக்கு ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்து

இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார், பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா...

28 views

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

என் 95 மாஸ்க் உள்ளே ரகசிய மைக் - மோசடி மாணவர்களை கைது செய்த போலீஸ்

20 views

ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து டுவிட்டரில் பதிவு - அலுவலர் கைது

ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் பெண் ஊழியர்களை ஆபாசமாக போட்டோ எடுத்து, டுவிட்டரில் பதிவிட்ட அலுவலர், கைது செய்யப்பட்டார்.

19 views

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டி: ஈட்டியெறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஈட்டியெறிதல் போட்டியில் இந்தியாவிற்கு இரட்டைப் பதக்கம் கிடைத்து உள்ளது.

17 views

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"ஆங்கிலம் படித்தாலும் இந்தியில் பேச வேண்டும்" - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

17 views

பிற செய்திகள்

வலிமை - முதல் பார்வை வெளியீடு

வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தி​ன் படக் காட்சிகள் வெளியாகி உள்ளது.

32 views

கனடா நாடாளுமன்ற தேர்தல் - இந்திய வம்சாவளியினர் 17 பேர் வெற்றி

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் இந்தியர்களின் வெற்றி குறித்து விரிவாக பார்ப்போம்

18 views

தலை தூக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் முயற்சியில் ஈடுபடுவோரை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

14 views

"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

13 views

"ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது"

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

7 views

ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் - 300க்கும் மேற்பட்டோர் கைது

மும்பையில் ஓராண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.