"விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்?" - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை ஏன்? - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
x
சட்டப்பேரவையில் இந்துசமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தி,  அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்தார். பின்னர், தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி விழாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு, ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என குறிப்பிட்டிருப்பதையும் அமைச்சர் சேகர்பாபு சுட்டிக்காட்டி பேசினார். எனவே ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையிலே தமிழ்நாட்டில் விநாயகர் சதூர்த்தி உள்ளிட்ட திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்தார். மேலும், வரும் முன் காப்போம் என்ற வகையில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, பிரார்த்தனை செய்ய இடையூறு இன்றி தமிழக அரசு செயல்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்