"வெற்றிகளை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்" - மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாராலிம்பிக்சில் இந்தியா தொடர் வெற்றிகளைக் குவித்து வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து 2 ஆவது முறையாக உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் மாரியப்பன் தங்கவேலு மற்றும் ஷரத்குமார், சிங்ராஜ் அதானா ஆகியோருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
Next Story

