பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிப்புகள் - அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியீடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில், நடைபெற்ற தொழிற்துறை மீதான மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
x
தமிழ்நாடு சட்டப்பேரவையில், நடைபெற்ற தொழிற்துறை மீதான மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் தங்கம் தென்னரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரம் சிப்காட் பூங்காவில் 400 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உலகத் தரம்வாய்ந்த ஆடை பூங்கா உருவாக்கப்படும் என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிப்காட் தொழில் பூங்காவில் 300 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் இந்தியாவிலேயே முதன்முறையாக வருங்கால நகர் திறன் பூங்கா உருவாக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். 

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில்,  250 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு குறிபிட்டார். 

இயற்கை சூழலை பாதுகாத்திட 150 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 சிப்காட் தொழில் பூங்காக்கள் மேம்படுத்தப்படும் என்றும் பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிப்காட் தொழில் பூங்காக்கள் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள நீர்நிலைகள் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

பணிபுரியும் மகளிரின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு 70 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சிறுசேரி மற்றும் பர்கூர் சிப்காட் தொழில் பூங்காக்களில் சிறப்பு வசதிகளுடன் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். 


கரூர் மாவட்டத்தில் சர்வதேச தரத்திலான ஜவுளி பூங்கா 200 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என்றும், 

திருச்சியில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் பொது சோதனை வசதி மையம் அமைக்கப்படும் என்றும் பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார். 

உப்பு உற்பத்தியை அதிகரிக்க ராமநாதபுரம் மாவட்டம் வாலி நோக்கத்தில் இயந்திரங்கள் மூலம் உப்பு எடுக்கும் வகையில் உப்பு பாத்திகள் 80 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்றும், 

வெளிச்சந்தையில் நெய்தல் என்ற வணிக பெயரில் உப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களது குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆண்டு ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்

சுமார் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரியலூரில் உள்ள புதிய சிமெண்ட் ஆலை ஏற்படுத்தப்படும்என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.  

மின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஆலங்குளத்தில் 10 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி ஆலை ஒன்று 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்

Next Story

மேலும் செய்திகள்