நாளை பள்ளி, கல்லூரிகள் திறப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்
நாளை முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறக்கப்படுவதை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறக்கப்படுவதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில்அதற்கான முன்னேற்பாடு நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள 143 அரசு பள்ளிகளில் நடைபெற்று வரும் தூய்மை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அரசு வழிகாட்டுதலின் படி அனைத்தும் உள்ளதா என ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் சத்துணவு கூடங்களை ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு இருப்பில் இருந்த பழைய அரிசிகளை அப்புறப்படுத்தி, மாணவர்களுக்கு தரமான முறையில் மதிய உணவு வழங்க அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி
நாளை முதல் பள்ளிகள் திறக்க இருப்பதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகளில் நேரடி வகுப்பு தொடங்க உள்ளது. இதையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறை, நாற்காலிகளை கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெறும் தூய்மை பணியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
