திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் 10வது நாளாக உண்ணாவிரதம்
திருச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 2 இலங்கை தமிழர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது.
திருச்சியில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள 2 இலங்கை தமிழர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளது. திருச்சி மத்தியச் சிறை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வலியுறுத்தி, இலங்கை தமிழர்கள் 10-வது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரின் உடல் நிலையை மருத்துவக் குழுவினர் இன்று பரிசோதனை செய்தனர். நாடித்துடிப்பு 50க்கும் கீழ் குறைந்ததால், அவர்கள் கோமா நிலைக்கு செல்லும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்தனர். இதையடுத்து, காவல்துறை உதவியுடன் இருவரும் குண்டு கட்டாக தூக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இலங்கை தமிழர்கள் இருவருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
