சார்பட்டா பரம்பரை- ரஞ்சித்திற்கு நோட்டீஸ்
உண்மைக்கு புறம்பான காட்சிகளை வடிவமைத்ததாக கூறி சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உண்மைக்கு புறம்பான காட்சிகளை வடிவமைத்ததாக கூறி சார்பட்டா பரம்பரை பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை ஒரு வரலாற்று படமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வரலாற்று நிகழ்வுகளை தவறாக மக்களிடத்திலே பரப்புகின்ற விதமாகவும் உண்மைக்கு மாறான விஷயங்களையும் படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரலாற்றுச் சம்பவங்களில் இல்லாத ஒரு விஷயத்தை யாரையோ திருப்திப் படுத்த வேண்டும் என்பதற்காக படம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசா சட்டத்தில் திமுக தலைவராக உள்ள ஸ்டாலின் கைது செய்யப்படாத நிலையில் அவரை கைது செய்யப்பட்டுள்ளதாக படத்தில் தகவல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிசாவை பற்றி விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் அறிக்கையின் 575 பக்கங்களிலும் ஸ்டாலினுடைய பெயர் எந்த இடத்திலும் பதிவாகவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எனவே, நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 48 மணி நேரத்திற்குள்ளாக படக்காட்சிகள் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டது என நாளிதழ்களில் பிரசுரிக்க வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. இல்லையென்றால் குற்றவியல் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

