மதுரை ஆதீனத்தின் உடல் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம்
மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியாக இருந்த அருணகிரி நாதர் நேற்றிரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் ஆதீன மடத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சியினர், மற்ற ஆதீனத்தினர் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயில் சார்பில் உடலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பூப்பல்லக்கில் அமர்ந்த நிலையில் அவரின் உடல் வைக்கப்பட்டு சித்திரை வீதிகளில் ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டது. இதன் பின்னர் ஆதீனத்துக்கு சொந்தமான இடத்தில் அருணகிரிநாதரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Next Story
