சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார்.
சட்டப்பேரவை தேர்தலில் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை திமுக வாக்குறுதியாக அளித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். அப்போது, மொத்தம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பரிசீலனை செய்து, 2 லட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களில் உள்ள குறைகளுக்கு தமிழக அரசு தீர்வு கண்டுள்ளதாக நேற்று பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படுத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார். தூத்துக்குடி மாவட்டத்தில் 67 சதவீத மனுக்களுக்கும், அரியலூர் மாவட்டத்தில் 41 சதவீத மனுக்களுக்கும் சேலம் மாவட்டத்தில் 37 சதவீத மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால் அந்த மாவட்டங்களின் ஆட்சியர்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பாராட்டினார்.
Next Story
