முதல்வர் ஸ்டாலினின் 100 நாள் ஆட்சி.... இலவச பேருந்து பயணம் பெண்களின் கருத்து

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று 100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில், பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம் பெற்றுள்ள வரவேற்பு பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...
x
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று
100 நாட்களை நிறைவு செய்யும் நிலையில், பெண்கள்
இலவச பேருந்து பயணத் திட்டம் பெற்றுள்ள வரவேற்பு
பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

கடந்த மே மாதம் 7ஆம் தேதி தமிழக முதலமைச்சராக
மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்றபோது 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம். அதன்படி, நகர்ப்புற பேருந்துகளில் பெண்கள் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, அன்றாடம் வேலைக்குச் சென்று வரும் பெண்கள்
இலவச பயணத்தின் மூலம் மாதம் தோறும் கணிசமான
தொகையை சேமிக்க முடிவதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

ஜீனத், பயணி

தனலட்சுமி, பயணி
 
பெண்களிடையே இத்திட்டம் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 
40% பெண் பயணிகள் வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில்
60 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்,
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.

ராஜ கண்ணப்பன், போக்குவரத்து துறை அமைச்சர்

இலவச பேருந்து பயணத்தால் பேருந்துகளில் பயணிக்கும்
பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

ஜான் வெஸ்லி, ஓட்டுநர்

ராமலிங்கம், நடத்துநர்

இலவச பயணத்தால் நாள் ஒன்றுக்கு 30 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை சேமிக்க முடிவதாக பெண் பயணிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்