கொரோனா அதிகரிப்பு - சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை கோவை உட்பட 19 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னை கோவை உட்பட 19 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் பல்வேறு மாவட்டங்களில் லேசாக அதிகரித்துள்ளது. பரிசோதனை விகிதாச்சாரம் அடிப்படையில் பார்த்தால் சென்னை, கோவை, திருச்சி உட்பட 19 மாவட்டங்களில் தொற்று சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Next Story

