தடுப்பூசி கோட்டாவில் மாற்றம் - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி

தனியார் மருத்துவமனைகளுக்கான 25% சதவீத தடுப்பூசி கோட்டாவில் மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
தடுப்பூசி கோட்டாவில் மாற்றம்  - மாநில அரசுகளுக்கு 75% தடுப்பூசி
x
தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக 75 சதவீத தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யும் மத்திய அரசு, அவற்றை மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. மீதமுள்ள 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளுக்கு கொடுக்கும் நடைமுறை அமலில் இருந்து வந்தது.இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் மிகக் குறைந்த அளவே தடுப்பு ஊசி செலுத்தப்படுவதால், உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளின் பெரும்பாலான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. இது குறித்து மாநிலங்களவையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாடவியா, மொத்தம் உள்ள 25 சதவீத ஒதுக்கீட்டில் 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை மட்டுமே தடுப்பூசிகள் கொள்முதல் செய்து செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 சதவீத தடுப்பூசிகளையும் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழங்கியது போக மீதமுள்ள தடுப்பூசிகளை அரசுக்கு வழங்கவும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் , தனியார் மருத்துவமனைகளிடம் பயன்படுத்தப்படாமல் கையிருப்பில் உள்ள 7 சதவீதம் முதல் 9 சதவீதம் வரையிலான தடுப்பூசிகளையும் மத்திய அரசு சேகரித்து வருகிறது


Next Story

மேலும் செய்திகள்