பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் எங்கே? - தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஆகஸ்ட் 04, 2021, 06:07 PM
பக்தவத்சல பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவாரூர் மாவட்டம் திருக்கண்ண மங்கை என்னும் இடத்தில் உள்ள பக்தவத்சல பெருமாள் கோயிலுக்கு சொந்தமாக 400 ஏக்கர் நிலங்களில், தற்போது ஏழு ஏக்கர் மட்டுமே இருப்பதாக குறிப்பிடிருந்தார். 400 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய கோயில் தனி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கோயிலில் இருந்து மாயமான செப்பு தகடுகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தினார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, காணாமல் போனதாக கூறப்படும் செப்பு தகடுகள், நாகப்பட்டினம் மாவட்டம் அறநிலையத்துறை இணை ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ளதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, கோயிலுக்குச் சொந்தமான 400 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஐந்து வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏழு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.