13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்

தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
13ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் - நிதியமைச்சர் பி.டி.ஆர் தாக்கல் செய்கிறார்
x
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட அறிவிப்பில், 2021-2022ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் வரும் 13ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 13ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். மேலும், நடப்பு கூட்டத்தொடரில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் 13ஆம் தேதி நடைபெறும் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படும். 


Next Story

மேலும் செய்திகள்