ஆன்லைன் மோசடி புகார் - டெல்லியை சேர்ந்த குற்றவாளிகள் 3 பேர் கைது

ஆன்லைன் பரிசுத் தொகையை பெறுவதற்காக வருமான வரித் துறை பெயரை பயன்படுத்தி மோசடி செய்த 3 பேரை, கரூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஆ
ஆன்லைன் மோசடி புகார் - டெல்லியை சேர்ந்த குற்றவாளிகள் 3 பேர் கைது
x
ஆன்லைன் பரிசுத் தொகையை பெறுவதற்காக வருமான வரித் துறை பெயரை பயன்படுத்தி மோசடி செய்த 3 பேரை, கரூர் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். ஆன்லைன் மோசடி தொடர்பாக, கரூர் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திலகா தேவி தலைமையிலான தனிப்படை போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்துள்ளனர். விசாரணை செய்ததில் டெல்லி ரயில்வே ரோடு, ஆசாத்புர்,  பப்பு பால் கடை தெருவைச் சேர்ந்த முன்வர் நஜார், சொகில்  அன்சாரி, மகேஷ் ஆகிய மூன்று நபர்களையும் கடந்த ஜூலை 30 ஆம் தேதி குற்றவாளிகள் என்று உறுதி செய்து கைது செய்தனர். பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் 3 குற்றவாளிகள் திருச்சி அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து ஆய்வாளர் திலகா தேவி தலைமையிலான போலீசார் 3 நபர்களையும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து குற்றவாளிகள் மூவரும் குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்