ஸ்கூட்டரில் கொரோனா தடுப்பூசி வடிவமைப்பு - ஜம்மு காஷ்மீர் வரை விழிப்புணர்வு பயணம்
சென்னையைச் சேர்ந்த நபர், ஸ்கூட்டரில் தடுப்பூசிகள் போல் வடிவமைத்து பொருத்தி, ஜம்மு காஷ்மீர் வரை கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் தனது ஸ்கூட்டரின் பின்புறத்தில், கொரோனா தடுப்பூசி போல் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைத்துப் பொருத்தியுள்ளார். கொரோனாவில் இருந்து விடுபட தடுப்பூசி முக்கியம் என்று வலியுறுத்தும் அவர், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இதே ஸ்கூட்டரில் ஜம்மு காஷ்மீர் வரை செல்லவுள்ளார். பிறகு மீண்டும் ஜம்மு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் மேற்கொள்ள உள்ளதாக ஆறுமுகம் தெரிவித்தார்.
Next Story
