தொடங்கிவிட்டதா மூன்றாம் அலை? - தமிழகத்திலும் சில நாட்களாக தொற்று உயர்வு

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
x
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் அதிகரித்து வருவதால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என அச்சம் எழுந்துள்ளது. கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த அண்டை மாநிலமான கர்நாடகத்தில் தற்போது மீண்டும் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் தொற்று கட்டுக்குள் வராத நிலையில், கர்நாடகாத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளது கவலை அளிக்கும் செய்தியாக எழுந்துள்ளது..ஜூலை 25ம் தேதி 1001ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, 29ம் தேதி இருமடங்காக அதிகரித்து 2,052ஆகவும், வெள்ளிக்கிழமை 1,890ஆகவும் பதிவாகியுள்ளது. பெங்களூருவில் 25ம் தேதி நிலவரப்படி 165 ஆக இருந்த தினசரி பாதிப்பு இரண்டு நாட்களாக 400-ஐ கடந்துள்ளது.மறுபக்கம் தமிழகத்திலும் 25ஆம் தேதி 1808ஆக இருந்த கொரோனா பாதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று 1947ஆக அதிகரித்தது. சென்னையில் 25ம் தேதி 126 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை 215ஆக அதிகரித்தது.இப்படி தமிழகத்திலும், கர்நாடகத்திலும் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மூன்றாம் அலை தொடங்கிவிட்டதா என அச்சம் எழுந்துள்ளது..
கேரளாவில் தினசரி பாதிப்பு சராசரி 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ளதால், தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்