பள்ளி, கல்லூரி மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்
பதிவு : ஜூலை 31, 2021, 02:52 PM
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, அப்துல்கலாமின் பேரன் ஷேக் தாவூத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், உயர்நீதிமன்ற உத்தரவின் படி தனியார் பள்ளிகள், தவணை முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.