மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி - சென்னையில் முக்கிய வணிக பகுதிகள் மூடல்
பதிவு : ஜூலை 31, 2021, 11:01 AM
சென்னை மாநகரின் முக்கிய வணிக பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என மண்டல கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக முக்கிய வணிக பகுதிகளை இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் தி.நகர் ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள சாலை, ஜாம்பஜார் சாலை , அமைந்தகரை மார்க்கெட் சாலை, ராயபுரம் மார்க்கெட் சாலை உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, வணிக பகுதிகளில் மண்டல கொரோனா கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சியின் திடீர் அறிவிப்பால் காலையில் கடை திறக்க வந்த ஏராளமான வணிகர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.