மக்களை தேடி மருத்துவம் புதிய திட்டம் : 5 - ந் தேதி துவக்கி வைக்கிறார் முதல்வர்

ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.
x
ஒரு கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை மருந்துகள் வழங்கும் "மக்களை தேடி மருத்துவம்" எனும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 5 ம்தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார்.

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று 20  லட்சத்திற்கும் மேற்பட்ட நீரிழிவு , சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்து, மாத்திரைகள் பெற வேண்டியுள்ளது.

மேலும் சிறுநீரக கோளாறு, புற்று நோய் காசநோய், முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சைக்காக அவ்வபோது மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழல் உள்ளது.

இதற்கு தீர்வாக, இந்நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு  அவர்களின் வீடுகளுக்கு சென்று மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கும் வகையில் 'மக்களை தேடி மருத்துவம்' எனும் திட்டம் துவக்கப்படுகிறது.

இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5ம் தேதி கிருஷ்ணகிரியில் துவக்கி வைக்கிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

சுகாதார துறை சார்பில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கும் தொடர்ச்சியாக ஒரு கோடி பேர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்