சங்கரய்யாவிற்கு 'தகைசால் தமிழர்' விருது - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
பதிவு : ஜூலை 28, 2021, 03:29 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவராந சங்கரய்யாவிற்கு தகைசால் தமிழர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களுக்காக தகைசால் தமிழர் விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுக்கு தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தகைசால் தமிழர் விருதினை மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியதற்காக சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுதந்திர தின விழாவில் சங்கரய்யாவுக்கு விருதுடன் 10 லட்சம் ரூபாய் காசோலை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.