9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
x
தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சித் 
தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவில்லை.

இந்நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளது.

இதையடுத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, பெரியகருப்பன்
மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலின் முக்கியத்துவம் குறித்து கூறுகிறார்,
மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கட்சியினர் துரோகம் செய்து விட்டதாகவும், தபால் ஓட்டுகளாலேயே தான் ஜெயித்ததாகவும்
ஆனால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவ்வாறு நடக்காமல்,
அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றும் துரைமுருகன் பேசியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்