சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
x
சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வரும் 2ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படம் சட்டப்பேரவையில் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு, கருணாநிதியின் படத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில், விழாவை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். 




Next Story

மேலும் செய்திகள்