"அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு செய்வதில்லை" - பாஜக தலைவர் அண்ணாமலை

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
x
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக கூறுவது உண்மையில்லை என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அப்துல் கலாமின் உருவ படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக கூட்டணியில் அதிமுக இருப்பதால் மரியாதை நிமித்தமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை சந்தித்ததாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்