விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
விஜய் காருக்கான நுழைவு வரி - சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
x
நடிகர் விஜய் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகர் விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கில், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி, அந்த வழக்கை விமர்சனத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

இந்த விவாகரத்தில், மேல்முறையீடு செய்துள்ள விஜய் தரப்பு, வழக்கு தள்ளுபடிக்கு எதிரானதல்ல என்றும், அபராதம் விதித்ததை எதிர்த்து மனு செய்துள்ளதாகவும் கூறியது. 

தனி நீதிபதியின் விமர்சனம் நடிகர்களை கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், 20 சதவீத வரி செலுத்திய நிலையில், பாக்கி வரியை செலுத்த உள்ளதாகவும் கூறினர். மேலும், விஜய் வழக்கில் மட்டும் நீதிபதி விமர்சனம் செய்துள்ளதாக கூறினர்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், வரி பாக்கி செல்லானை ஒரு வாரத்தில் அனுப்பவும், மனுவுக்கு பதிலளிக்குமாறும் வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டது. விசாரணை, ஆகஸ்ட் 31க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




Next Story

மேலும் செய்திகள்