"இஸ்ரேல் வீரருடன் விளையாட முடியாது" - அல்ஜீரிய ஜுடோ வீரர் கருத்து
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட பிரச்சினை டோக்கியோ ஒலிம்பிக்கிலும் எதிரொலித்து உள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த ஜூடோ வீரர் ஃபெதி நவ்ரின், இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட முடியாது என்று கூறி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட பிரச்சினை டோக்கியோ ஒலிம்பிக்கிலும் எதிரொலித்து உள்ளது. அல்ஜீரியாவை சேர்ந்த ஜூடோ வீரர் ஃபெதி நவ்ரின், இஸ்ரேல் வீரருக்கு எதிராக விளையாட முடியாது என்று கூறி போட்டியில் இருந்து விலகி உள்ளார். ஒலிம்பிக்கைக் காட்டிலும் பாலஸ்தீன மக்களே தங்களுக்கு முக்கியம் என்றும் அவர் கூறி உள்ளார். இதனால், டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளார். இதனிடையே, சர்வதேச ஜூடோ சம்மேளனம், ஒலிம்பிக்கில் இருந்து விலகிய அல்ஜீரிய வீரர் நவ்ரின் மற்றும் அவரது பயிற்சியாளரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
Next Story
