ரூ.21 செலவில் 120 கி.மீ பயணிக்கும் கார்..! - தமிழரின் அசத்தல் கண்டுபிடிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
x
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் குறைந்த செலவில் பேட்டரியில் இயங்கும் காரை வடிவமைத்து பொறியாளர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.  

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. பொறியியல் பட்டதாரியான இவர், கொலராடோ பல்கலைக்கழகத்தில் பேட்டரி தொழில் நுட்பவியலை முடித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் இளையராஜா, பேட்டரிகளை வைத்து வாகனங்களை இயக்குவதில் அதீத ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பேட்டரியில் இயங்கும் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனத்தை சொந்த முயற்சியில் வடிவமைத்து அதன்மூலம் பணிக்கு சென்று வந்துள்ளார்.

பின்னர் பயனில்லாமல் இருந்த காரை விலைக்கு வாங்கிய இளையராஜா, அதில் நவீன பேட்டரியை பயன்படுத்தி காரை சீரமைத்து பயன்படுத்தி வருகிறார். 

2009ஆம் ஆண்டில் இருந்து பேட்டரி வாகனங்களை வடிவமைப்பதில் கவனத்தை செலுத்தி வருவதாகவும், விடா முயற்சியால் பேட்டரி சைக்கிள், பைக்கை தொடர்ந்து தற்போது பேட்டரி காரை வடிவமைத்துள்ளதாகவும் பெருமிதம் கொள்கிறார். 

7 யூனிட் மின்சாரம் மூலம் தினமும் வாலாஜாபாத்தில் இருந்து அம்பத்தூருக்கு 21 ரூபாய் செலவில் 120 கிலோ மீட்டர் பணிக்கு சென்று வருவதாக கூறுகிறார் இளையராஜா. 


Next Story

மேலும் செய்திகள்