தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தென்மேற்கு பருவக்காற்று  காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை, தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.மேலும் நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  அதிகபட்சமாக கோவை மாவட்டம் சோலையாறில் 9 செ.மீ. மழையும்,
சின்னக்கல்லாரில் 7 செ.மீ., வால்பாறையில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும், தெற்கு வங்க கடல் மற்றும் அதனை  ஒட்டிய மத்திய வங்க கடல், அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் வரும் 27ஆம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்