எலான் மஸ்க் டுவிட்டரில் போட்ட 'லைக்' - சென்னை நிறுவனத்திற்கு ரூ 7.44 கோடி முதலீடு கிடைத்துள்ளது

அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் டுவிட்டரில் போட்ட ஒரே லைக்கில் சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் ஏழரை கோடி ரூபாய் வரையில் முதலீடு கிடைத்துள்ளது.
x
அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் சிஇஓ எலான் மஸ்க் டுவிட்டரில் போட்ட ஒரே லைக்கில் சென்னையை சேர்ந்த நிறுவனத்திற்கு சுமார் ஏழரை கோடி ரூபாய் வரையில் முதலீடு கிடைத்துள்ளது.

சூரிய மின்சக்திக்கு முக்கியத்தும் கொடுக்கும்   சிங்கப்பூர் அரசு, ஒரு லட்சத்து 22 ஆயிரம் சோலார் பேனல்களை கொண்ட மிதக்கும் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது.

அங்கு சோலார் பேனல்களை குறைந்த அளவு தண்ணீரை தெளித்து சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டிருப்பது சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த சூர்யா டிரோன்.

இதுகுறித்த வீடியோ தகவலை அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த பதிவுக்கு  எலான் மஸ்க் லைக்போடவும் உலகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. 

இதன்மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு கிடைத்து உள்ளதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

டிஆர்டிஓ உடன் இணைந்து டிரோன் தாக்குதலை முறியடிக்கும் டிரோனை உருவாக்கியிருப்பதாகவும் கருடா ஏரோஸ்பேஸ் தெரிவித்துள்ளது.  

கொரோனா தடுப்பு பணிகளுக்காக தங்களுடைய பிரத்யேக டிரோன்களும்  பணியில் இருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்