சென்னையில் 2வது விமான நிலையம்? - விமான நிலைய விரிவாக்கப் பணி மும்முரம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
x
சென்னையில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை  தமிழக அரசு இன்னும் இறுதி செய்யாததால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னையில் 2-வது விமான நிலையம் எப்போது அமைக்கப்படும் என்று மக்களவையில், அதிமுக எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத் கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் ஆகிய 2 இடங்களை தெரிவு செய்ததாகவும், ஆனால் அதில் ஒன்றை இதுவரை இறுதி செய்யவில்லை எனவும் மக்களவையில் பதிலளித்தார், விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங்.கடந்த 2019-ஆம் ஆண்டின் தரவுகளின்படி சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு சுமார் 2 கோடி பயணிகள் வரை பயன்படுத்துவதாக தெரியவருகிறது.எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, இதனை 3 கோடியே 50 லட்சம் பயணிகள் பயன்படுத்தும் வகையில் மாற்றுவதற்காக, 2-வது விமான நிலையத்திற்கு திட்டமிடப்படிருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள அண்ணா மற்றும் காமராஜர் முனையங்களை 2 ஆயிரத்து 467 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுமட்டுமின்றி சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு  5 கோடி பயணிகளை கையாள கூடிய வகையில், சாட்டிலைட் விமான முனையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்