90களில் கொடிகட்டி பறந்த ரியல் டான்சிங் ரோஸ் - யார் இந்த டான்சிங் ரோஸ்?
பதிவு : ஜூலை 24, 2021, 04:54 PM
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இணையத்தில் பேசுபொருளாக இருக்கும் இந்த பாத்திரத்தை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

1970களில் எமர்ஜியன்சி அமலில் இருந்த போது, தற்போதைய வடசென்னையில் மிகவும் பிரபலமாக இருந்த ரோசமான ஆங்கில குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்..

விறுவிறுப்பான காட்சிகள், கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரங்கள் என ரசிகர்களை சிலாகிக்க வைத்துள்ளது பா. ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை..

இதில் குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டது.

கதாநாயகனை எதிர்த்து சண்டையிடும் பாத்திரமாக இருந்தாலும், கதாநாயகன் அளவிற்கு பேசப்படுகிறது டான்சிங் ரோஸ் பாத்திரம். முதலில் டம்மியாக இருப்பது போன்று காட்டப்பட்டாலும், இன்டர்வெல் மற்றும் க்ளைமாக்ஸில் டான்சிங் ரோஸ் பாத்திரத்திற்காக வைக்கப்பட்ட காட்சிகள் தரமானவை...

இந்த பாத்திரம் ரியல் டான்சிங் ரோஸான PRINCE NASEEM HAMEED-ஐ மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. 90களில் இருந்து 2002ஆம் ஆண்டு வரை குத்துச்சண்டை போட்டிகளில் கவனத்தை ஈர்த்தவர். தனித்துவமான ஆட்டத்திறனால் ரசிகர்களை கவர்ந்தவர் இந்த நசீம்

இப்படி ரியல் டான்சிங் ரோஸை அப்படியே கண்முன் கொண்டு வந்து, ரசிகர்கள் மனதை கவர்ந்துவிட்டார் ரீல் டான்சிங் ரோஸாக நடித்துள்ள சபீர்..

ஆயுத எழுத்து படத்திலேயே துணை நடிகராக திரையில் தோன்றிய சபீர், அடங்க மறு, பேட்ட படத்தில் நடித்திருந்தாலும், இந்த டான்சிங் ரோஸ் தான் அடையாளம் காட்டி கொண்டாட வைத்துவிட்டது.

தமிழ் சினிமாவில் தனித்து ஜொலிக்கும் இந்த டான்சிங் ரோஸ்....

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

674 views

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

460 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

62 views

பிற செய்திகள்

விஜய் மக்கள் இயக்கம் கலைப்பு - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக இயக்குனர் சந்திரசேகர், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளார்.

21 views

வெளிநாட்டினரை கண்காணிக்க வேண்டும் - நீதிமன்றம்

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் நடமாட்டத்தை கண்காணிக்க மாவட்ட அளவில் தனிப் பிரிவை ஏற்படுத்த தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 views

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகள் - கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வழக்கு : தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற, அனுமதி கோரிய வழக்கை, ஒருவாரத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.

15 views

"காவிரி நீரை முறையாக வழங்கவில்லை" - கர்நாடக அரசு மீது தமிழக அரசு குற்றச்சாட்டு

காவிரி நீரை கர்நாடகா முறையாக வழங்கவில்லை என, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு குற்றம்சாட்டி உள்ளது.

15 views

அரசு பாம்பு பண்ணை மீண்டும் திறப்பு - பார்வையாளர்களுக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பாம்பு பண்ணை ஆறு மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் பாம்பு பண்ணை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

14 views

"ஒலிபெருக்கிகளுக்கு அனுமதியில்லை என்றால் பறிமுதல் செய்யப்படும்" - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிபெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என்று, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.