வடிவேலு பட பாணியில் நிஜ சம்பவம் - நண்பனை அடகு வைத்துவிட்டு திருட்டு
பதிவு : ஜூலை 24, 2021, 11:56 AM
வடிவேலு பட பாணியில் நண்பனை அடமானம் வைத்து விட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சம்பவம் நாமக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது....
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் பழைய இருசக்கர வாகனங்களையும் அவர் விற்று வந்தார். இதனிடையே இருசக்கர வாகனம் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக அவர் ஓஎல்எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ராதாகிருஷ்ணன் என்பவர் ரவிச்சந்திரனுக்கு போன் செய்துள்ளனர். முழு தொகையை கொடுத்துவிட்டு வாகனத்தை வாங்கிச்  செல்வதாக உறுதி அளித்துவிட்டு கடைக்கு வந்த அவர், வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என கூறி உள்ளார்... அப்போது அங்கிருந்த ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை எடுத்து ஓட்டி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் ராதாகிருஷ்ணன். அப்போது தன்னுடன் வந்த வெங்கடேஷை கடையில் நிறுத்தி வைத்து விட்டு 2 லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை ட்ரையல் பார்ப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளார். 
வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சியை போலவே, வாகனத்துடன் போனவர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன் அடமானத்தில் இருந்த வெங்கடேஷிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது தான் வெங்கடேஷ் பலிகடா ஆக்கப்பட்டது தெரியவந்தது. 15 நாட்களுக்கு முன்பாக தன்னுடன் பள்ளிப்பாளையம் தனியார் கம்பெனியில் செக்யூரிட்டி வேலைக்கு சேர்ந்தவர் தான் ராதாகிருஷ்ணன் என்றும், இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என கூறி அழைத்து வந்ததும் தெரியவந்தது. வாகனத்துடன் சென்ற ராதாகிருஷ்ணனின் பலே திட்டத்தை அறிந்து கொண்ட கடை உரிமையாளர், வெங்கடேஷையும் அழைத்துக் கொண்டு போலீசில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் வாகனத்துடன் மாயமான இராதாகிருஷ்ணன் பெரம்பலூரை சேர்ந்தவர் என தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்....

தொடர்புடைய செய்திகள்

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெக்காரா தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்து உள்ளார்.

450 views

கியானு ரீவ்ஸின் "The Matrix Resurrections" : வெளியான திரைப்பட ட்ரெய்லர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த "MATRIX 4" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

58 views

இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட வெடிப்பு - சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு

பஞ்சாப்பின் ஃபாசில்கா பகுதியிலுள்ள ஜலாலாபாத் நேஷனல் வங்கி அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.

57 views

பிற செய்திகள்

இன்று கரையை கடக்கும் குலாப் புயல் - 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்க கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

5 views

விமானப்படை பெண் அதிகாரிக்கு பாலியல் வன்கொடுமை - சக விமானப்படை அதிகாரி கைது

கோவை விமான படை பயிற்சி கல்லூரியில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

0 views

தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு - பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

சென்னையில் நடைபெற்று வரும் மெகா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

9 views

ஜாமீன் பெற்று தருவதாக ரூ.200 கோடி மோசடி: சிறையில் இருந்து கொண்டே சுகேஷ் கைவரிசை

பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி ரோஹிணி சிறையில் இருந்தவாறே அரங்கேற்றிய 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சிக்கியது எப்படி என்பதை பார்க்கலாம்...

10 views

பில்லி சூனியம் எடுப்பதாக கூறி மோசடி: ரூ.80 லட்சம் ஏமாற்றிய 4 பேர் கைது

தாம்பரத்தில், பில்லி சூனியம் எடுப்பதாக கூறி, 80 லட்சம் ரூபாய் ஏமாற்றிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

12 views

காட்பாடி ஒன்றிய அலுவலக மோதல்: அதிமுகவினர் மீது வழக்கு-3 பேர் கைது

காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக அதிமுகவினருக்கிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதிமுகவினர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டதை அடுத்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.