ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஆடி முதல் வெள்ளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு அம்மன் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்
x
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரண்டு வாசல் வழியாக மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வெளியூர் பக்தர்கள் பலரும் அம்மனை தரிசக்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ள பண்ணாரியம்மன் கோயில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பெண் பக்தர்கள் கோயில் முன்பு நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.  

தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான  பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

திருவண்ணாமலை பச்சையம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் ஒன்று கூடி தரிசனம் செய்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அம்மனுக்கு கோழி மற்றும் கிடா வெட்டி,  பொங்கல் வைத்து படையலிட்டு தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். 

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள வண்டியூர் மாரியம்மன் கோயிலில் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.  மாரியம்மனுக்கு இளநீர், வேப்பிலை, நீர், பால் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாவிளக்கு படைத்தும், பொங்கலிட்டும், உப்பு மிளகு செலுத்தியும் பெண்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. 

தங்க கவசத்துடன் அருள்பாலித்த உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டனர்.  அம்மனுக்கு வளையல், வஸ்திரம் சாத்தியும், விளக்கேற்றியும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அம்மனை வழிபட்டனர். ஆனால் கொரோனா காரணமாக அம்மனுக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

ஆடி வெள்ளியையொட்டி, தஞ்சை பட்டீஸ்வரம் துர்க்கை அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும் பூஜை பொருட்களை பக்தர்கள் உள்ளே எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. 

ஆடி மாத முதல் வெள்ளியும்,  ஆடி பவுர்ணமியும் ஒரே நாளில் வந்தததால், சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு, தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்