அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.
அதிமுக 28-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
தமிழகத்தில் வரும் 28 ம் தேதி அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்து உள்ளனர்.

அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், 
"விடியல்" தரப்போவதாகவும், தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் "நீட்" தேர்வு ரத்து செய்யப்படும் என்று ஊரெங்கும் பிரச்சாரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ஏதோ செய்வார்கள் போலிருக்கிறது என்று நம்பி மக்கள் வாக்களித்த நிலையில்,

"நீட்" தேர்வுக்கு தயாராகும்படி தற்போது, மாணவர்களுக்கு திமுக அரசு உத்தரவிட்டிருப்பது அவர்களுக்கு செய்யும் துரோகம் என்று கூறியுள்ளனர்.

தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழக பொருளாதார வளர்ச்சி மேம்படவும் நீட், விவசாயிகள் உள்ளிட்ட அதிமுகவின் கோரிக்கைகளை திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாகவும் அதில் கூறியுள்ளனர்.

திமுக அரசின் மெத்தன போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும்,

வரும் 28 ம் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஒன்றியம், ஊராட்சி ஆகிய பகுதிகளில்,

 தங்களின் வீடுகளின் முன்பு தொண்டர்கள் பதாகை ஏந்தி கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்பி தமிழக மக்களின் குரலாய் ஒழிக்க வேண்டும் என்று,
அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்