தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக வழக்கு - நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரிய வழக்கில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தவறான சிகிச்சையால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக வழக்கு  - நீதிமன்றம் உத்தரவு
x
கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குளத்தைச் சேர்ந்த செல்லசாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில் தன் மருமகள் நிவேதிதா, பிரசவத்திற்காக கடந்த 2020 ல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தவறான சிகிச்சையால் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை புதுக்கடை காவல் ஆய்வாளர் முறையாக விசாரிக்கவில்லை என்றும், உடற்கூராய்வு அறிக்கை வருவதற்கு முன்பாகவே புதுக்கடை காவல் ஆய்வாளர் வழக்கு விசாரணையை முடித்து விட்டார் என தெரிவித்துள்ளார். 

எனவே புதுக்கடை காவல் ஆய்வாளர் தாக்கல் செய்த விசாரணையின் இறுதி அறிக்கையை ரத்து செய்வதோடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளங்கோவன், 
வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் அல்லாமல் தாசில்தாரிடம் சமர்ப்பித்தது தவறு என்றார். 

மேலும் விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்