"மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து"

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இன்றி புதிய பேருந்து கொள்முதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து
x
"மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்து" 

மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இன்றி புதிய பேருந்து கொள்முதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய உத்தரவிடக் கோரினார்.தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்விலான விசாரணையில், 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக கூறினார்.சாலைகளை மேம்படுத்திய பின், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பேருந்து கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில்,10 சதவீத பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும், இந்தியா ஏழை நாடு என்றும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் விளக்கமளித்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், ஆட்சியாளர்கள் ஏழைகளா?, எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஏழைகள் என வினவினர்.2016-ல் இயற்றிய சட்டப்படி, மாற்றுத் திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய தடை விதித்த நீதிபதிகள், விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்