ஜெயங்கொண்டம் மாளிகைமேடு அகழ்வாராய்ச்சி - அரண்மனை சுவர், வாய்க்கால் கண்டுபிடிப்பு

ஜெயங்கொண்டம் அருகே மாளிகை மேடு அகழ்வாராய்ச்சியில் பிரம்மாண்டமான அரண்மனை சுவர், செங்கற்களால் ஆன நீர்போக்கி வாய்க்கால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
x
கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமை இடமாக கொண்டு  ராஜேந்திர சோழன் ஆட்சி செய்து வாழ்ந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்நிலையில் அதன் அரண்மனை கங்கை கொண்ட சோழபுரம்  அருகே உள்ள மாளிகை மேட்டில் உள்ளது என்று முன்பு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் அதற்கான சான்றுகள் உள்ளது. அதனை தொடர்ந்து தற்பொழுது மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சி பணி கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு முதலில் கூரை ஓடுகள், இரும்பிலான ஆணிகள், சீன வளையல்கள், செப்பு காசுகள் உள்ளிட்டவைகள் கிடைத்த நிலையில் தற்போது சுமார் 5 அடி உயரமுள்ள ஒரு மீட்டர் அகலம் உள்ள பிரம்மாண்டமான சுவரும்,  சுமார்  5 அடி நீளமுடைய செங்கற்களால் ஆன நீர்ப்போக்கி வாய்க்காலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்