வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு - எம்ஆர் விஜயபாஸ்கரின் இடங்களில் சோதனை

முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு - எம்ஆர் விஜயபாஸ்கரின் இடங்களில் சோதனை
x
முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ஆதரவாளர்கள் வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 20 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்துவதற்கான ஆணையை நீதிமன்றத்தில், லஞ்சம் ஒழிப்புத்துறை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை, கல் குவாரி, அவரது சகோதரர் சேகரின் வீடு, ஆதரவாளர்களின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சி, செல்வ நகரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு முன்பாக ஆதரவாளர்களும், அதிமுக கட்சியினரும் திரண்டுள்ளனர். சோதனை நடைபெறும் பகுதிகளில் வெளியாட்கள் உள்ளே வருவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்