ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகைக்கு சுற்றறிக்கை - உதவி ஆணையர் மீது நடவடிக்கை

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருகையை குறிப்பிட்டு, சாலை சீரமைப்புக்கு உத்தரவிட்ட சர்ச்சையை தொடர்ந்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
x
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் வருகையை குறிப்பிட்டு, சாலை சீரமைப்புக்கு உத்தரவிட்ட சர்ச்சையை தொடர்ந்து, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் அப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 நாள் பயணமாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்  மோகன் பகவத் இன்று மதுரை வருகிறார். இந்நிலையில், அவரின் வருகை குறிப்பிட்டு, சாலைகளை சீரமைப்பது குறித்து, வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன் மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரும் கேள்வி எழுப்பினர். 

அதற்கு, விளக்கம் அளித்த மதுரை மாநகராட்சி ஆணையர், "இசட் பிளஸ்" பாதுகாப்பில் இருக்கும் பிரமுகர்கள் பயணம் செய்யும் போது, விதிகளின் படி, வழக்கமாக சில முன்னேற்பாடுகள் செய்யப்படும். சிறப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ள படவில்லை என்றார். 

இதன் தொடர்ச்சியாக, தவறுதலாக புரிந்து கொள்ளும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டதற்கு விளக்கம் கேட்டதுடன், உதவி ஆணையர் பணியில் இருந்த சண்முகம், அப்பணியில் விடுவிக்கப்படுவதாகவும் ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். ஆணையரின் இந்த அறிவிப்பை மதுரை எம்பி வெங்கடேசன் வரவேற்றுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்