ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை - 1 லட்சம் ஸ்கூட்டர்களுக்கும் மேல் முன்பதிவு
பதிவு : ஜூலை 22, 2021, 10:14 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா நிறுவனம் சார்பில் பிரம்மாண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு
வருகிறது. இங்கு தயாரிக்கப்படவுள்ள எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு
இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் ஓலா நிறுவனம் சார்பில் 500 ஏக்கர் பரப்பளவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. 3 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிவடைந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.அதிநவீன தொழில்நுட்பத்துடன் 3 ஆயிரம் ரோபோக்களை கொண்டு 2 விநாடிக்கு ஒரு ஸ்கூட்டரை உற்பத்தி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1 கோடி எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 15 ஆயிரம் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என இணையத்தில் அறிவிப்பு வெளியான, சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேலான வாடிக்கையாளர்கள் முன் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்வதற்காக 400 பெருநகரங்களில் சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்படும் எனவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

(15/07/2021) திரைகடல் - ஆகஸ்ட் முதல் வாரத்தில் "வலிமை" முதல் பாடல்? டீசர் ரிலீஸ் தேதி தெரியுமா?

174 views

"3 வது அலை வந்தால் சமாளிக்க தயார்" - மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேச்சு

இந்தியாவில் எந்த காரணத்தை முன்னிட்டும் 3 வது அலை பரவி விடக் கூடாது என சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

36 views

ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் - ஒலிம்பிக் ஜோதியை சுமந்து உற்சாகம்

ஜப்பானின் டோக்கியோ நகரில், ஒலிம்பிக் ஜோதி தொடர் ஓட்டம் உற்சாகத்துடன் நடந்தது.

17 views

பிற செய்திகள்

பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் - மேலும் 1 மாதத்திற்கு நீட்டித்தது தமிழக அரசு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை தமிழக அரசு மேலும் ஒரு மாதத்தற்கு நீட்டித்துள்ளது.

8 views

கலெக்டர் பெயரை பயன்படுத்தி மோசடி முயற்சி - பெண் ஒருவரை கைது செய்த போலீசார்

தஞ்சை மாவட்ட ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பெண் ஒருவரை போலீசார் பொறி வைத்து பிடித்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் நடந்ததை இப்போது பார்க்கலாம்....

10 views

கைதிகள் - உறவினர் நேரில் சந்திக்க தடை - கைதிகளின் உறவினர்கள் மனநிலை என்ன?

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்....

11 views

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் - முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தி்ல் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

25 views

சட்டப்பேரவையில் கருணாநிதி படம் திறப்புவிழா - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சட்டப்பேரவையில் கருணாநிதியின் படம் திறக்கும் விழாவின் ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

10 views

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்கள் - முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பு

வாகனங்களுக்கு எரிவாயு விநியோகம் செய்ய 25 சிஎன்ஜி நிலையங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து இன்று திறந்து வைத்தார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.