புலியால் அடித்து கொல்லப்பட்ட நபர் - உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில், புலியால் அடித்து கொல்லப்பட்ட நபரின் உடல் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் உறவினர்களால் திரும்ப பெறப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
x
வீட்டின் முன் ஆடு மேய்த்த கிருஷ்ணன் என்பவரை, புலி ஒன்று அடித்து கொன்றது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்து, அவரது உடலை பெற்றுச் செல்ல ஊர் மக்கள் மறுப்பு தெரிவித்தனர். 
முதுமலை வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க அகழி சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இதனையடுத்து, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் வனத்துறை அதிகாரிகள், ஊர் மக்கள் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்.ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல் திரும்ப பெறப்பட்டது. 



Next Story

மேலும் செய்திகள்