பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி - மின் சைக்கிளை கண்டுபிடித்த இளைஞர்

ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையில் மின்சார சைக்கிளை விழுப்புரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் வடிவமைத்து அசத்தியுள்ளார்.
x
பெட்ரோல்- டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விழுப்புரம் அருகே உள்ள பக்கமேடு கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞர் பயனுள்ள கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர், இரும்பு கடைக்கு சென்று அங்கிருந்த பழைய சைக்கிள் ஒன்றை ரூ.2 ஆயிரத்திற்கு வாங்கி வந்து அதில் மின் மோட்டார், பேட்டரி, கண்ட்ரோலர் என்பது உள்ளிட்ட கருவிகளை பொருத்தி மின்சாரத்தில் சைக்கிளை வடிவமைத்துள்ளார். இதற்காக மொத்தம் ரூ.20 ஆயிரம் செலவு செய்ததாக கூறுகிறார் பாஸ்கரன்.

மின்சார சைக்கிளில் உள்ள பேட்டரியில் ஒருமுறை சார்ஜ் போட்டால் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். ஒரு முறை சார்ஜ் போடுவதற்கு ஒரு யூனிட் மின்சாரம் தேவைப்படும். இந்த ஒரு யூனிட் மின்சாரத்தில் 50 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இவரின் முயற்சி அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்