"முதலீட்டாளர்களின் முதல் முகவரி-தமிழ்நாடு" - தொழில் கூட்டமைப்பினரின் கருத்து என்ன?

28 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 49 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கும் நிலையில், தொழில் கூட்டமைப்பினரின் கருத்து என்ன? என்பது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...
x
தொழில்துறை சார்பில் "முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு" என்ற நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 35 தொழில் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 5 திட்டப்பணிகள் தொடங்கிவைக்கப்பட்டது.
மொத்தமாக 49 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருப்பதன் மூலம், 28,508 கோடி ரூபாய் முதலீட்டில், 83,482 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், புதிய தொழில் திட்டங்களை ஈர்ப்பதைப் போல, பழைய தொழில் திட்டங்களுக்கும்  தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்கின்றனர், தொழில் கூட்டமைப்பினர்.
புதிதாக செயல்படுத்த உள்ள இரண்டு திட்டங்களின் மூலம், 35 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முடியும் என்கிறார் டி.சி.எஸ்., நிறுவன தலைமை செயலதிகாரி கணபதி சுப்ரமணியன். தமிழ்நாடு அரசு யாரையும் அழைக்கவில்லை எனக்கூறும் இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் சி.கே.ரங்கநாதன், பலர் தொழில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது அரசின் மீதான நம்பிக்கை என்கிறார்


Next Story

மேலும் செய்திகள்