தமிழ் வழி கல்வி - நீதிமன்றம் உத்தரவு

ஒன்றாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி குருப் 1ல் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ் வழி கல்வி - நீதிமன்றம் உத்தரவு
x
ஒன்றாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு  வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத ஒதுக்கீட்டின் அடிப்படையில்  டிஎன்பிஎஸ்சி குருப் 1ல் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவு  பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்  மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவில்  

கடந்த பிப்ரவரி மாதம் டி.என்.பி.எஸ்.சி.  சார்பில் வெளியிடப்பட்ட தேர்வு முடிவில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு   இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும் உத்தரவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது.

ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணிகள் நடந்து வருவதால்.   விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது  +2 வரை  ஆங்கில வழியில் படித்து விட்டு,  பட்டபடிப்பு மட்டும் வேலைக்காக தமிழ் வழியில் கல்வி கற்க  வரலாமா என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் பல்வேறு  பல்கலை கழகங்களில் பட்டபடிப்பை  தமிழ் வழியில் படித்ததாக முறைகேடாக, சிலர் விதி மீறி சான்றிதழ் பெற்று உள்ளதாகவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

எனவே கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் டி.என்.பி.எஸ்.சி.சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்