49 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம்; 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
49 தொழில் திட்டங்களுக்கு ஒப்பந்தம்; 83,482 பேருக்கு வேலைவாய்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
x
83 ஆயிரத்து 482 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், தமிழ்நாட்டில் 49 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சென்னையில், தொழில்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,17 ஆயிரத்து 141 கோடி ரூபாய் முதலீட்டில் 55 ஆயிரத்து  54 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 

35 தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

மின் ஆலைகள், மோட்டார் வாகன உதிரிபாகங்கள், தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், காலணிகள், மருத்துவப் பொருட்கள், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையடுத்து, 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதேபோல், 7 ஆயிரத்து 117 கோடி ரூபாய் முதலீட்டில் 6 ஆயிரத்து 798 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 5 திட்டங்களின் வணிக உற்பத்தியினைத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்