அரசு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பங்கேற்க தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரசு நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பங்கேற்க தடை விதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
x
அரசு நிகழ்ச்சிகளில் திமுக மாவட்ட செயலாளர் பங்கேற்கவும், தலைமையேற்கவும் தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கோவை மாவட்டம் உடையம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கோவை நகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரான பையா ஆர்.கிருஷ்ணன், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி போல, அரசு நிகழ்ச்சிகளுக்கு தலைமை தாங்கி வருவதாகவும்,  இதற்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு எந்த பங்கும் இல்லை என்ற போதும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 

இதனால் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக மாவட்ட செயலாளருக்கு தடை விதித்து  உத்தரவிட முடியாது என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்