அமைச்சர் துரைமுருகன் மீதான வன்கொடுமை புகார் - மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு நோட்டீஸ்

சாதிய வன்கொடுமை, நில அபகரிப்பு புகாரில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராக, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எஸ்பிக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேட்டீஸ் அனுப்பியுள்ளது.
அமைச்சர் துரைமுருகன் மீதான வன்கொடுமை புகார் - மாவட்ட ஆட்சியர், எஸ்பிக்கு நோட்டீஸ்
x
சாதிய வன்கொடுமை, நில அபகரிப்பு புகாரில், அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்காத விவகாரத்தில், விசாரணைக்கு நேரில் ஆஜராக, வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் எஸ்பிக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேட்டீஸ் அனுப்பியுள்ளது.

வேலூர் அண்ணா நகரைச் சேர்ந்த பி.சுப்பிரமணி என்பவர் அளித்த புகாரில், அமைச்சர் துரைமுருகன், அவரது உறவினர்கள், தி.மு.க பொறுப்பாளர்களை பயன்படுத்தி, வேலூர் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் தொழிலை பல பினாமி பெயர்களில் மேற்கொண்டுவருவதாக கூறியுள்ளார். அவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்தோடு, மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்த புகாரில் துரைமுருகன் மீது, ஆட்சியர் மற்றும் எஸ்பி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து,  அனைத்து ஆவணங்களுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி, வரும் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்